
தனியார் விண்கலமான ப்ளூ கோஸ்ட் நிலவில் தரையிறங்கியது.தனியாருக்குச் சொந்தமான விண்கலம் ஒன்றே இவ்வாறு நிலவில் தரையிறங்கியுள்ளது.
இது நிலவின் மேற்பரப்பை அடையும் இரண்டாவது வணிக விண்கலம் எனும் பெருமையைப் பெற்றுள்ளது.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட விண்வெளி மையத்திலிருந்து ஜனவரி 15 ஆம் திகதி இந்த விண்கலம் தனது பயணத்தை ஆரம்பித்தது.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த விண்கலம் தனது பயணத்தை ஆரம்பித்தது.