
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கடற்படை அதிகாரி கைது!
ஊவா பரணகம – கெடகொட பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் பாரியளவிலான கசிப்பு வகை போதைப்பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த கடற்படை அதிகாரி ஒருவர் அம்பகஸ்தோவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நபர், விடுமுறையில் வந்து நீண்ட நாட்களாக இத்தொழிலை மேற்கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த நபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 18,000 கிராம் கோடா மற்றும் கசிப்பு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, மற்றுமொரு சந்தேகநபர் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தப்பிசென்ற நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.