
விபத்தில் அறுவர் உயிரிழப்பு!
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத் மாவட்டம் தலுதிஹ் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட அறுவர் உயிரிழந்தனர்.
மேலும் இந்த விபத்தில் 07 பேர் காயமடைந்துள்ளனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மகா கும்பமேளாவில் புனித நீராடுவதற்காக பிரயாக்ராஜுக்குச் சென்று கொண்டிருந்தபோது சனிக்கிழமை அதிகாலை 1:15 மணியளவில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்த அனைவரும் மேற்கு வங்கத்தின் ஹூக்ளி மாவட்டத்தின் கவுகாட் பொலிஸ் நிலையப் பகுதியில் உள்ள சத்வேதிஹா பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த பழுதடைந்த டிரக் மீது வேகமாக வந்த எஸ்யூவி வாகனம் முதலில் மோதியதன் பின்னர் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தின் பின்னர், உடனடியாக அப்பகுதியில் ரோந்து வந்த பொலிஸார் உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.