
சவூதி அரேபியாவின் ஸ்தாபகர் தின கொண்டாட்ட நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பங்கேற்பு
சவூதி அரசின் ஆரம்ப வரலாற்றையும், பண்பாட்டு பெருமையையும் முன்னிறுத்தி கொண்டாடப்படும் சவூதி அரேபிய ஸ்தாபக தின நிகழ்வும், இலங்கை-சவூதி அரேபிய இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர நட்பறவு ஆரம்பமாகி 50 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்ட விருந்துபசார நிகழ்வும் நேற்று (22) மாலை கொழும்பில் மிக விமர்சியாக இடம்பெற்றது.
இவ்வரலாற்று சிறப்புமிக்க கொண்டாட்ட நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வானது சவூதி அரேபியாவின் வரலாற்று பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை நினைவுகூருவதுடன், இலங்கைக்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்து காணப்படுகின்றது.