குழந்தையின் சிறுநீரகத்தை அகற்றியமை தொடர்பான வழக்கு – 25ம் திகதி விசாரணைக்கு

கொழும்பு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மூன்று வயது குழந்தையின் சிறுநீரகத்தை அகற்றியது தொடர்பான வழக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துகொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (11) கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனாவல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ததாகக் கூறும், தற்போது வெளிநாட்டில் இருக்கும் வைத்தியர் நவீன் விஜேகோனின் வாக்குமூலமும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin