
தலைமை, சின்னத்தில் சஜித் தரப்பு விடாப்பிடி எனத் தெரிவிப்பு.
உள்ளூராட்சித் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் நடத்தி வரும் பேச்சுக்கள் தொடர்ந்தும் இழுபறிக்குள்ளாகி வருகின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது.
தலைமை மற்றும் சின்னங்கள் விடயத்தில் இணக்கம் ஏற்படாததாலே, இப்பேச்சுக்கள் இழுபறியில் செல்வதாகவும் தெரிய வருகிறது.
தொலைபேசிச் சின்னத்தை விட்டுக் கொடுக்க ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்தும் மறுத்து வருகிறு.
எதிர்வரும், உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட ஒரு பொதுவான கூட்டணியின் கீழ் வருவது குறித்து, இரு கட்சிகளின் செயற்குழுவினர்களும் சமீபத்திய நாட்களில் பல சுற்று விவாதங்களை நடத்தியிருந்தனர்.
இக்கலந்துரையாடலில், தொலைபேசியைக் கைவிட்டு பொதுவான சின்னத்தின் கீழ் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி முன்மொழிந்தது.
இந்நிலையில், தொலைபேசியைக் கைவிட்டு வேறு எந்தச் சின்னத்திலும் போட்டியிட முடியாதென ஐக்கிய மக்கள் சக்தி உறுதியுடன் தெரிவித்துள்ளது. இதுவே,இழுபறி ஏற்படக் காரணமாகியது உள்ளதாக தெரியவருகிறது