கல்கிஸ்ஸை, சிறிபுர பகுதியில் இன்று (19) பிற்பகல் ஒருவரை சுட்டுக் கொன்ற கொலையாளி தப்பிச் செல்லும் போது தெஹிவளையின் கௌடான பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கொலையாளி மற்றுமொரு நபருடன் மோட்டார் சைக்கிளில் வந்து, கொலையைச் செய்துவிட்டு தப்பிச் சென்ற வேளையில் பொலிஸார் துப்பாக்கியுடன் கொலையாளியையும் கைது செய்யதனர்
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 47 வயதுடையவர் என்றும், அவர் ஒரு கொலையாளி என்றும், ஏற்கனவே கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு கூலிக் கொலையாளி என. பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவத்தில் கொல்லப்பட்ட சவிந்து தரிந்து என்ற 24 வயது இளைஞன், துபாயில் பதுங்கியுள்ள பாதாள உலகக் கும்பல் உறுப்பினரான கொஸ் மல்லியின் சீடர் என கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்த வந்த சந்தேக நபர் படோவிட்ட அசங்கவின் குழுவையைச் சேர்ந்தவர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. கொஸ் மல்லிக்கும் , படோவிட்ட அசங்கவிற்கும் இடையே நீண்டகாலமாக இருந்த தகராறின் விளைவாக இந்தக் கொலை நடந்ததாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.
இரு தரப்பினருக்கும் இடையிலான இந்த தகராறில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது வரை 7 ஆக அதிகரித்துள்ளது.