“ஐக்கிய தேசிய கட்சி – ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்”
இன்றைய தேசிய நாளிதழ் ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றுக்குக்கு கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து விளாவிரித்திருந்தார்.
இன்று ஐக்கிய தேசியக் கட்சி – ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் ஒற்றுமை பற்றி உங்கள் கருத்து என்ன?
“அப்போதிருந்து, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியும் எப்படியாவது ஒரே கட்சியாக, ஒரே குழுவாகச் செயல்பட வேண்டும் என்று நான் நம்பியிருந்தேன்.
ஜனாதிபதித் தேர்தலின் போது எமது முகாமை அவ்வாறான ஒற்றுமையுடன் வெற்றிபெறச் செய்ய முயற்சித்தேன். ஆனால், அன்று அந்த முயற்சி வீணானது. இந்த இரண்டு கட்சிகளையும் மீண்டும் ஒரு அரசியல் குழுவாக மாற்ற நான் இன்னும் முயற்சி செய்கிறேன்.
அந்தவகையில் முதலில் பலமான எதிர்க்கட்சியையும் பின்னர் அரசாங்கத்தையும் பெறுவதற்கான தெளிவான வாய்ப்பு எமக்கு உள்ளது.
மறுபுறம் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் வெவ்வேறு அரசியல் செய்வதற்கு எந்த காரணமும் இல்லை.
எங்கள் இரு கட்சிகளின் கொள்கைகளும் மிக நெருக்கமாக உள்ளன. கிராம மட்டத்தில் கூட எமது ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினரும் மிக நெருங்கிய குழுவாக உள்ளனர். எனவே, இந்த நேரத்தில் நாட்டிற்கு வலுவான எதிர்க்கட்சி வேடம் தேவை.
அடிப்படையில், எங்கள் இரு கட்சிகளும் அதற்காக இணைந்து செயல்பட வேண்டும்”
அப்படியென்றால் ரணில்-சஜித் கூட்டணியா?
நான் தனிநபர்களைப் பற்றி பேசவில்லை. நாம் இருதரப்பும் சில உடன்பாட்டுக்கு வரலாம். அப்படித்தான் இருக்க வேண்டும்.
அந்த ஒப்பந்தம் என்ன, எப்படி, எந்த வகையில் அந்த ஒப்பந்தத்தை எட்ட முடியும் என்பதை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும். ஒற்றுமைதான் இங்கு முக்கியம்.”