நடிகை குஷ்பு கைது!

தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மகளிரணியினர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் திமுக அரசைக் கண்டித்தும் மாணவிக்கு நீதி கோரியும் பாஜக மகளிரணி சார்பில் இன்று(3) ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, மதுரை முதல் சென்னை வரை பேரணி நடத்த மாநில தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால், இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கு பொலிஸார் அனுமதி வழங்கவில்லை. எனினும் தடையை மீறி மதுரையில் பாஜக மகளிரணித் தலைவர் உமாரதி தலைமையில் குஷ்பு உள்ளிட்ட மகளிர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பொலிஸார் அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

பேரணிக்கு அனுமதி தருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. அவர்கள் அனுமதி தரமாட்டார்கள் என்பது முன்பே தெரியும் என்று குஷ்பு கூறியுள்ளார்.

மேலும், மதுரையில் நடக்கவிருந்த பேரணிக்குச் செல்ல திண்டுக்கல் மேற்கு மாவட்ட மகளிரணியினர் பழனியிலிருந்து புறப்பட்ட நிலையில் அவர்கள் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மதுரையில் பாஜக மகளிரணியினர் கைது செய்யப்பட்டதற்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், மகளிரணி நிர்வாகிகள் பலரை பொலிஸார் வீட்டுக்காவலில் வைத்திருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார.

Recommended For You

About the Author: admin