5 கிலோ நகைகள் அணிந்து திருமலைக்கு சென்ற பக்தர்
புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் இலவச தரிசனம் வாயிலாக சுவாமியை தரிசிக்க 14 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்தனர்.
புத்தாண்டை முன்னிட்டு, நேற்று அதிகாலை 2 மணிக்கு திருப்பாவை சேவையும், அதனைத் தொடர்ந்து அர்ச்சனை, தோமாலை சேவை என ஆர்ஜித சேவைகள் நடைபெற்றன. முதல்வர் சந்திர பாபு நாயுடு, நேற்று காலை விஜயவாடாவில் உள்ள கனகதுர்கையம்மன் கோயிலுக்கு சென்று அம்மனை தரிசித்தார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த தெலங்கானா ஒலிம்பிக் சங்க துணைச் செயலாளர் விஜய குமார், 5 கிலோ எடையில் தங்க நகைகளை அணிந்து ஏழுமலையானை தரிசித்தார். இவரை பக்தர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.