எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராகி வருகிறார் ; திலித் ஜயவீர M.P
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராகி வருவதாக மௌபிம ஜனதா கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் தனது பிறப்புச் சான்றிதழை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருப்பது அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராக இருப்பதையே உணர்த்துகிறது.
எதிர்க்கட்சி என்பது அதிக சக்தி கொண்ட கட்சி என்றும் அது துணிச்சலான எதிர்க்கட்சி என்றும்; எதிர்க்கட்சி என்று அழைப்பதற்காக இது எதிர்க்கட்சியல்ல என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு, எதிர்க்கட்சிகள் எப்படி செயல்படுகின்றன, மக்களை எப்படி கையாள்கின்றன என்பதை மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள் என்றார்