மன்மோகன் சிங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (27) புது டில்லியில் உள்ள இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதன்போது, மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரன் கவுர் கோஹ்லிக்கு அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
புது டில்லியில் உள்ள மன்மோகன் சிங்கின் வீட்டிற்குச் சென்ற இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் ரணில் விக்ரமசிங்கவும் ஒரு சுருக்கமான கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.
அத்துடன், இந்திய முன்னாள் பிரதமரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் அதேவேளையில் ரணில் விக்ரமசிங்க இந்த நாட்களில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணத்தினையும் மேற்கொண்டு வருகிறார்.