வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த வேனில் மோதிய கார் இருவருக்கு காயம்
ஹபரனை ஹிரிவடுன்ன மின்சார சபைக்கு அருகில் இன்று (27) பிற்பகல் 1.25 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த கார் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்றின் பின்பகுதியில் மோதியதில் ஏற்பட்ட விபத்து.
காரில் பயணித்த இருவர் காயமடைந்து ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.