சுனாமி பேரலையால் உயிர் நீத்த மக்களின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல்.

உலகளாவிய ரீதியில் 2004 ஆம் ஆண்டு பாரிய சேதங்களை ஏற்படுத்திய சுனாமி பேரலை அனர்த்தம் ஏற்பட்டு 20 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் (26.12) வியாழக்கிழமை, இடம் பெற்று வரும் நிலையில், இன்றைய தினம்(26) மன்னார் மாவட்டச் செயலகத்திலும் 20 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் கே.திலீபன் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து தீபம் ஏற்றி மலர் தூவி,சர்வமத தலைவர்களின் பிரார்த்தனைகளுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில்,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மற்றும் திணைக்கள தலைவர்களும், சர்வ மதத் தலைவர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Recommended For You

About the Author: ROHINI ROHINI