குறைந்த வருமானம் பெறும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவி திட்டங்கள்!
நத்தார் புதுவருடத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் கர்ப்பிணிப் பெண்கள், வயோதிபர்களுக்காக உதவி திட்டங்கள் 513 வது இராணுவ படைப்பிரிவால் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது
யாழ்.மாவட்ட பாடசாலைகளைச் சேர்ந்த 50 மாணவர்களின் தேவையை கருத்தில் கொண்டு அவர்களுக்கான 50 துவிச்சக்கர வண்டிகளும், 25 கற்பிணிப் பெண்களுக்கான உலர் உணவுப்பொருட்களும், 25 வயோதிகர்களுக்கான உலர்உணவு பொதிகளும் வகைகளும் வழங்கிய வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் யாழ்ப்பாண மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜென்ரல் மானத ஜகம்பத் 513 வது படை பிரிவின் கட்டளை தளபதி, 51 படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் நிசாந்த முத்துமால, 513 வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் பிரசாந்த ஏக்கநாயக்க தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி, பா.நந்தகுமார் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்