அரச ஊழியர்களுக்கு போனஸ்

அரச ஊழியர்களுக்கு போனஸ்

அரச கூட்டுத்தாபனங்கள், நியதிச் சட்ட சபைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 2024ஆம் ஆண்டிற்கான மேலதிக கொடுப்பனவு வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ளது.

திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் நேற்று (23) அனைத்து அமைச்சின் செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்கள், நியதிச் சட்ட சபைகள் மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் தலைவர்களுக்கு இந்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான மேலதிக கொடுப்பனவை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து சுற்றறிக்கையில் முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன.

2023ஆம் ஆண்டில் இலாபம் ஈட்டியுள்ள மற்றும் குறைந்தபட்சம் 30 சதவீத இலாபத்தை ஒருங்கிணைக்கப்பட்ட நிதிக்கு ஈவுத்தொகையாக அல்லது வரியாக செலுத்திய நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 25,000 அல்லது 20,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவாக முன்மொழியப்பட்டுள்ளதாக சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சுற்றறிக்கை மூலம் உரிய மேலதிக கொடுப்பனவு வழங்குவதில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை குறித்தும் திறைச்சேரி செயலாளர் விளக்கமளித்துள்ளார்.

இதனால், திறைசேரி குறிப்பாக மேலதிக கொடுப்பனவு வழங்குவதற்கு நிதி வழங்காது என திறைசேரி செயலாளர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்குவதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், அதற்கு அமைச்சரவையின் சிறப்பு அங்கீகாரத்தை பெறுவது கட்டாயம் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin