உணவு கையாளும் நிலையங்களில் திடீர் பரிசோதனை!

உணவு கையாளும் நிலையங்களில் திடீர் பரிசோதனை!

பண்டிகைக் காலத்தையொட்டி யாழ் மாவட்டத்தில் உணவு கையாளும் நிலையங்களின் சுகாதார நிலையை மேம்படுத்தும் நோக்குடன் வடமாகாண சுகாதாரப் பணிப்பாளரின் வழிகாட்டலின் கீழ் இன்று திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுள்ளது என யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்

அதன்படி இன்று யாழ்ப்பாணம் நல்லூர், உடுவில் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இக் களப் பரிசோதனையில் சுகாதாரத்திணைக்களத்தை சேர்ந்த 9 குழுக்கள் ஈடுபட்டிருந்தன. இவர்களால் இன்று 76 உணவு கையாளும் நிலையங்கள் மேற்பார்வை செய்யப்பட்டதுடன் இவற்றில் 28 உணவு கையாளும் நிலையங்களில் குறைபாடுகள் காணப்பட்டிருந்தன.

அத்துடன் 12 உணவு கையாளும் நிலையங்களுக்கு குறைபாடுகளை சீர்செய்யும்படி எழுத்துமூல அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டிருந்தது

மேலும் 15 உணவு கையாளும் நிலையங்களில் தரமற்ற உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 2 உணவு கையாளும் நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படிருந்தது அதன் தொடர்ச்சியாக யாழ் மாவட்டத்திலுள்ள ஏனைய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் இப்பரிசோதனை நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்

Recommended For You

About the Author: admin