பதிவாளர்களின் சம்பளத்தை அதிகரித்து தாருங்கள்.. செயலாளர் வைத்தியர் ஜெயலன் வேண்டுகோள்
பிறப்பு இறப்பு விவாகப் பதிவாளர்களின் மாதாந்த சம்பளத்தை அதிகரித்து தருமாறு யாழ் மாவட்ட பிறப்பு இறப்பு மற்றும் விவாகப் பதிவாளர் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஜெயலன் கோரிக்கை விடுத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் மாவட்டத்தில் உள்ள பிறப்பு இறப்பு விவாகப் பதிவாளர்கள் பல்வேறு நெருக்கடிகளிலும் தமது சேவையை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
குறிப்பாக கூறினால் யாழ் போதனா வைத்திய சாலையில் பிறப்பு இறப்பு பதவியில் ஈடுபட்டு பதிவாளர்கள் கொடுப்பனவு நீதியாக நெருக்கடிகளுக்கு உள்ளாகி வருவதுடன் மன உளைச்சலுக்கும் உள்ளாகி வருகின்றனர்.
யாழ் போதனா வைத்தியசாலையில் மாதம் 500 தொடக்கம் 800 பிறப்புகள் இடம்பெற்று வரும் நிலையில் அவற்றை பதிவு செய்வதற்காக மூன்று பக்கங்களில் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
சில மாதங்களில் ஆயிரத்தை தாண்டிய பிறப்புக்களும் இடம்பெற நிலையில் 5 பேரை நியமித்தால் கூட பதிவுகளை எழுதி முடிப்பது கடினம்.
இவ்வாறான நிலையில் விரைவாகவும் நேர்த்தியாகவும் எமது பொறுப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக அங்கு கடமையாற்றும் இரண்டு பதிவாளர்கள் தமக்கு உதவியாளர்களை இணைத்து சேவையாற்றி வருகின்றனர்.
மூன்று படிவங்களை ஒரு பிறப்புக்கு நிரப்புவதற்கு 75 ரூபாய் வேதம் வழங்கப்பட்டு வருகிறது இது தற்போதைய சூழ்நிலையில் போதாத ஒரு கொடுப்பனவு.
ஆகவே எமது சேவையை தொடர்ச்சியாக பல்வேறு நெருக்கடிகளில் மத்தியிலும் செய்து வரும் நிலையில் மக்கான கொடுப்பனவை அதிகரித்து தருமாறு பதிவாளர் நாயகத்திடம் கோரிக்கை முன் வைத்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்