முற்றாக தடைக்கு வருகிறது மேலதிக வகுப்புக்கள்.

முற்றாக தடைக்கு வருகிறது மேலதிக வகுப்புக்கள்.

மீறும் அதிபர்கள் ஆசிரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை!

அரசாங்க பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடசாலை நேரங்களிலோ அல்லது பாடசாலை தவிர்ந்த நேரங்களிலோ தனித்ததோ அல்லது கூட்டாகவோ பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்பிப்பதற்கு முழுமையான தடையை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பெற்றோர்களினது பொருளாதார சுமையை பாரியளவில் கட்டுப்படுத்துவதற்கும்

மாணவர்களது ஒழுக்கத்தை சீர் செய்வதற்கும் மற்றும் பாடசாலை கல்வியை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மேலும் பாடசாலை வளங்களை பயன்படுத்தி பாடசலையில் மாணவர்களிடம் அல்லது வெளியாரிடம் பணங்களை அறவிட்டு எந்தவொரு வகுப்பு நடத்துவதும் இதே போன்று இதுவரை நடைபெற்ற வகுப்புக்கள் அவ்வாறு இருப்பின் அதற்கான கணக்கரிக்கைகள் அதிபர்கள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மற்றும் குறிப்பிட்ட அதிபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

இதே வேளை ஆசிரியர்கள் தனியார் மேலதிக வகுப்புகளை நடத்துவதைக் கட்டுப்படுத்தி மேல் மாகாண கல்வி அமைச்சு (Sri Lankan Ministry of Education)சுற்றறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.

 

பாடசாலை நேரங்களுக்கு பின்னர் அல்லது வார இறுதி உள்ளிட்ட விடுமுறை நாட்களில் வெவ்வேறு பகுதிகளில் வைத்து பணத்தை அறவிட்டு தங்களது பாடசாலை மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கும் தடை விதிக்கப்படுவதாக இந்த சுற்றறிக்கையில் தெரவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல்களை, பின்பற்றாத ஆசிரியர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அது குறித்து சகல வலய கல்வி பணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin