இலங்கையின் கடன் தரப்படுத்தலில் சாதகமான போக்கு காணப்படுவதாக, ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, குறித்த நிறுவனம் இலங்கையில் கடன் தரத்தை மேம்படுத்துவதாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, நீண்டகால வெளிநாட்டு நாணயங்களை வழங்குபவர்களின் மதிப்பீடு CCC எதிர்மறையிலிருந்து CCC நேர்மறையாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
இது, மேம்பட்ட மேக்ரோ பொருளாதார குறிகாட்டிகளை பிரதிபலிப்பதோடு, உள்ளூர் நாணய இயல்புநிலை அபாயத்தை குறைத்து, சர்வதேச கடன் மறுசீரமைப்பின் வெற்றியை மேம்படுத்தியுள்ளது என்று, ஃபிட்ச் ரேட்டிங்ஸ் கூறியுள்ளது.
இதேவேளை, வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பின் படி, எட்டு திறைசேரி பத்திரங்கள் மூலம் சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்தப் பத்திரங்கள் அனைத்தும், ஒதுக்கப்பட்ட ஆயிரத்து தொள்ளாயிரத்து நானூற்று அறுபத்தாறு தசம் ஒரு மில்லியன் ரூபாவை உள்ளடக்கியதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.