ஜனநாயக அரசியல் வழிமுறைகள் ஊடாகவே எமது மக்களது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்து, ஜனநாயக தேசிய நீரோட்டத்தில் இணைந்தவர்கள் நாம் என்ற வகையில், கடந்த தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுகளையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு
கிளிநொச்சி மாவட்ட கட்சியின் முக்கியஸ்தர்களுடன் இன்று(21.12.2024) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த விடயத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.
கட்சியை செழுமைப்படுத்தி பலப்படுத்தும் வகையில் தேசிய மாநாட்டிற்கு தயாராகுமாறு உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மற்றும் மாகாணசபை தேர்தல்களை சவாலாக கொண்டு எதிர்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.#