சுகாதாரமற்ற முறையில் வாகனமொன்றில் ஏறாவூர் நோக்கி கொண்டு செல்லப்பட்ட மாட்டிறைச்சிகள் பதில் நீதிவானின் உத்தரவுக்கமைவாக நேற்றிரவு அழிக்கப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையினர் அதனை கைப்பற்றி மூதூர் நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.எம்.நஸ்லீம் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
சுகாதார பரிசோதனையின் பின்னர் குறித்த இறைச்சிகள் சுகாதரமற்ற முறையில் இருந்தமையால் 654 கிலோ கிராம் மாட்டு இறைச்சிகளையும் அழிப்பதற்கு மூதூர் நீதிமன்ற பதில் நீதிவான் நேற்று (12) உத்தரவிட்டார்.
அத்தோடு வாகனத்தில் கொண்டு சென்ற இருவருக்கும் தலா 20 ஆயிரம் தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் குறித்த இறைச்சிகள் நேற்று (12) இரவு மூதூர் நீதிமன்ற வளாகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் வைத்து பெக்கோ இயந்திரம் மூலம் புதைக்கப்பட்டது.
தோப்பூரிலிருந்து ஏறாவூர் நோக்கி சுகாதாரமற்ற முறையில் மாட்டிறைச்சிகள் வாகனமொன்றில் கொண்டு செல்லப்படுவதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இவ் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.