கரை ஒதுங்கிய 2 தொன் எடையும் 18 அடி நீளம் கொண்ட இராட்சத திமிங்கலம் 

கரை ஒதுங்கிய 2 தொன் எடையும் 18 அடி நீளம் கொண்ட இராட்சத திமிங்கலம்

இராமநாதபுரம் பாம்பன் கடற்கரையில் நேற்று காலை 2 தொன் எடையும் 18 அடி நீளம் கொண்ட இராட்சத திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த திமிங்கலம் நீல திமிங்கல வகையை சேர்ந்தது எனவும், இவ் வகை திமிங்கலங்கள் 118 அடி நீளம் வரை வளரக்கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த திமிங்கலத்தின் உடலை பாம்பன் கடற்கரை பகுதியில் புதைப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கரை ஒதுங்கிய இந்த இராட்சத திமிங்கலத்தை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் அங்கு வருகை தருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin