தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்துமாறு கோரி பெற்றோர்கள் சிலரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை எதிர்வரும் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (11) உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் மூன்று வினாக்கள் கசியப்பட்ட சம்பவத்தையடுத்து பரீட்சையை மீள நடத்துமாறு கோரி பெற்றோர்கள் சிலர் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், இந்த மனு எஸ். துரைராஜா மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Recommended For You

About the Author: admin