எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் வற் வரியை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியும் கிடைத்துள்ளதாக அரசாங்க உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வற் அதிக சதவீதத்தாலும், ஏனைய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு குறைந்த சதவீதத்தாலும் குறைக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வரவு செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பிக்க உள்ளார்.
வற் வரியை குறைப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்படும் வருமானத்தை ஈடு செய்யும் வகையில் பல மாற்று வருமான யோசனைகள் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.