மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் ஆதாயம் தேடுவீர்கள். லாபம் இல்லாமல், எந்த ஒரு முடிவையும் எடுக்க மாட்டீர்கள். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பிள்ளைகளால் மனம் மகிழ்ச்சி கிடைக்கும். பயணத்தின் போது கொஞ்சம் கவனமாக இருக்கவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ஜெயம் உண்டாக கூடிய நாளாக இருக்கும். தொட்ட காரியம் சுலபமாக வெற்றியடையும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புது தொழில் துவங்குவது, புது வேலைக்கு போகுவது, போன்ற முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நிச்சயம் உங்களுக்கான நல்லது நடக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மனது ஆன்மீகத்தை நாடும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கும். கெடுதல் உங்களை விட்டு தானாக விளக்கும். எதிரிகள் எல்லாம் விலகி விடுவார்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த நாள் நல்ல நாளாக இருக்கும். உங்களுக்கு ஏதேனும் தீர்க்க முடியாத பிரச்சனைகள் இருந்தால், இன்று அந்த பிரச்சனையை கையில் எடுங்கள். நல்லதொரு தீர்வை இறைவன் கொடுப்பான்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று மன நிம்மதியான நாளாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் ஆன்மீக ரீதியான வழிபாட்டில் அதிக அக்கறை காட்டுவீர்கள். சந்தோஷம் நிறைந்த இந்த நாளில் புது உறவுகள் ஒன்று சேரும். சுப காரிய தடைகள் விலகும். சுப செலவுகள் ஏற்படும் நீண்ட நாள் பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். நிதி நிலைமை சீராகும். –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று அடுத்தவர்களுக்கு உதவியாக இருப்பீர்கள். மனது நிம்மதி அடையும். வேலையிலும் தொழிலிலும் எதிர்பார்த்ததை விட, நல்லது நடக்கும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். வாங்கிய கடனை எல்லாம் திருப்பி அடைப்பீர்கள். உங்களுக்கும், வீட்டிற்கும் தேவையான பொன் பொருள் சேர்க்கை இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதியான நாளாக இருக்கும். அந்தந்த வேலைகள், அந்தந்த நேரத்தில் சரியாக நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். வேலையில் இருந்து டென்ஷன் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவு படுத்தலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து தானாக தேடி வரும். வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். சோம்பேறித்தனப்பட்டு எந்த வேலைக்கும் பின் வாங்க மாட்டீர்கள். துணிச்சலோடு செயல்படுவீர்கள் எந்த இடத்திலும் தலைகுனிந்து நிற்க மாட்டீர்கள். எதிரிகளை வெல்வீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று நேரத்திற்கு எல்லா வேலையும் சரியாக நடக்கும். சொன்ன வாக்கை சரியாக காப்பாற்றி முடிப்பீர்கள். நல்ல பெயர் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. வெளிநாட்டில் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று லாபமான நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். உடன் வேலை செய்பவர்களோடு நட்புறவு பழக வேண்டும். யாரையும் எதிரியாக நினைக்கக் கூடாது. யாரிடமும் அனாவசியமாக சண்டை போடக்கூடாது. முன் கோபப்படக்கூடாது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றிவாகை சூடக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். நீண்ட தூர பயணம் நன்மையை கொடுக்கும். சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்திலும் எதிர்பாராத அளவு லாபத்தை அடைவீர்கள். சேமிப்பை உயர்த்துவீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் வசூல் ஆகாத கடன் வசூலாகும். மன நிம்மதி கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்வீர்கள். மனைவிக்கு பிடித்தமான பொருட்களை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சி அடைவீர்கள். சந்தோஷம் இரட்டிப்பாகும் நாளாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று இன்பமான நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்த விஷயங்கள் நடக்கும். இறை வழிபாட்டில் நேரத்தை செலவு செய்தீர்கள். உற்சாகத்தோடு இருப்பீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்கும். பிள்ளைகளோடு நேரத்தை செலவு செய்து சந்தோஷம் அடைவீர்கள்.