தேசிய போட்டிக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து இரு பாடசாலைகள் தெரிவு
கொழும்பு ஸாஹிரா கல்லூரி நடாத்தும் Soccer 7s உதைபந்தாட்ட போட்டிக்கு கிழக்கு மாகாண பாடசாலைகளில் இரண்டு பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டன. தகுதி காண் போட்டிகளில் கலந்து வெற்றி பெற்று இப்பாடசாலைகள் முன்னேறியுள்ளன.
கிழக்கு மாகாண பாடசாலைகளில் இரண்டு பாடசாலைகளின் உதைபந்தாட்ட அணிகள் இப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன. கிண்ணியா கல்வி வலயத்தின் சூரங்கல் அல் அமீன் மஹா வித்தியாலயம் மட்டக்களப்பு மத்தி வலயத்தின் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை அணியும் தெரிவு செய்யப்பட்டுள்ளன. சூரங்கல் அல் அமீன் மஹா வித்தியாலயமானது திருகோணமலை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு பாடசாலை உதைபந்தாட்ட அணி என்பது குறிப்பிடத்தக்கதாகும்
ஸாஹிரா கல்லூரி Soccer 7s உதைபந்தாட்ட போட்டிகளின் தொடர் நிலைப் போட்டிகள் எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெற இருக்கிறது இப்போட்டிகள் கொழும்பு ரேஸ் கோஸ் சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும்