மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடக்கும்
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
‘வடக்கு, கிழக்கில் பல தசாப்தங்களாக தமிழரசுக் கட்சியே பிரதான கட்சியாக இருந்தது. அக்கட்சியை நாம் இன்னும் மதிக்கின்றோம். ஆனால் தற்போது தேசிய மக்கள் சக்தியே வடக்கு, கிழக்கு மக்களினதும் பிரதான கட்சியாகும். எனவே மக்கள் வழங்கியுள்ள ஆணையின் அர்த்தத்தை புரிந்துகொள்ளுங்கள்.” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.