ஆண்டின் முதல் 10 மாதங்களில் 1000ஐ தாண்டிய தொழுநோயாளர்கள்

ஆண்டின் முதல் 10 மாதங்களில் 1000ஐ தாண்டிய தொழுநோயாளர்கள்

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொழுநோய் பிரச்சாரம் தெரிவித்துள்ளது.

அந்த காலப்பகுதியில் 1,084 நோயாளர்கள் கண்டறியப்பட்டதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் நிருபா பல்லேவத்த குறிப்பிட்டுள்ளார்.

அவர்களில், சுமார் 68 சதவீதம் பேர் இந்த நோயை மற்றொரு நபருக்கு பரப்பக்கூடியவர்கள்.

மேலும், அடையாளம் காணப்பட்ட தொழுநோயாளிகளில், கொழும்பு மாவட்டத்தில் அதிகளவானோர் பதிவாகியுள்ளதுடன், எண்ணிக்கை 115 ஆகும்.

கம்பஹா மாவட்டத்தில் 113 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கடந்த வருடத்தில் சுமார் 1500 தொழுநோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு பிரச்சாரத்தின் பணிப்பாளர் நிருபா பல்லேவத்த தெரிவித்தார்.

இதேவேளை, நோய்க்கு சிகிச்சை பெறும் போது தேவையற்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என ஆய்வக சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் பிரியந்த அத்தபத்து தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைகள் ஊக்குவிப்பு பணியகம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், அநாவசியமான நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பாவனையால் நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகளின் பிரதிபலிப்பு நடைபெறுவதில்லை எனக் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: admin