இலங்கை மக்களுக்கு உதவி செய்யப் போய் சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கிறாராம் நடிகர் பிளாக் பாண்டி. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக சில வாரங்களுக்கு முன் நடிகர் பிளாக் பாண்டி இலங்கைக்கு வந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் இலங்கைக்கு சென்றமை குறித்து , காவல்துறை மற்றும் வருமான வரித்துறையினர் தற்போது கேள்வி மேல் கேள்வி கேட்டு விசாரித்துவருவதால் நடிகர் பிளாக் பாண்டி வேதனையில் இருப்பதாக தமிழக் தகவல்கள் கூறுகின்றன .
அறக்கட்டளை மூலம் சில பொதுச்சேவை
விஜய் டி.வி-யில் ‘கனா காணும் காலங்கள்’ தொடரில் நடித்தவர் நடிகர் பிளாக் பாண்டி. தொடர்ந்து ‘அங்காடித் தெரு’ உள்ளிட்ட சில படங்களிலும் நடித்திருந்தார். இந்நிலையில் இவர் ‘உதவும் மனிதம்’ என்கிற பெயரில் அறக்கட்டளை ஒன்றையும் நிறுவி, அதன் மூலம் சில பொதுச் சேவைகளையும் செய்துவந்தார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட கிராமப்புற மக்களுக்குத் தேவையான மற்றும் பண உதவியும் செய்தது நடிகர் பிளாக் பாண்டியின் ‘உதவும் மனிதம்’ அமைப்பு.
நடிகரின் நண்பருக்கு எச்சரிக்கை
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் தமிழக டிஜி.பி அலுவலகத்திலிருந்து இலங்கை செல்வதற்காகப் பாண்டிக்கு உதவிய, நெருக்கமான அந்த நண்பரை அழைத்தவர்கள், “நாடு விட்டு நாடு போய் செய்யற உதவிகளையெல்லாம் நேரடியாப் போய்ச் செய்ய வேண்டாம்ன்னு சொல்லிடுங்க, அது தேவையில்லாத சிக்கலை வரவழைக்கலாம்” என எச்சரித்திருந்ததாக கூறப்படுகின்றது.
“இத்தனைக்கும் நடிகர் பாண்டி விசா நடைமுறைகளை பின்பற்றியதுடன் , இலங்கைத் தூதரகத்துக்கும் தெரிவித்துவிட்டுதான் உதவிகளைச் செய்துட்டு வந்தார்.
இப்ப என்னன்னா, ‘யாரைக் கேட்டுப் போய் வந்தீங்க’ன்னு பொலிஸாரும், ‘இனிமே இந்த மாதிரியெல்லாம் நடக்காதுன்னு எழுதிக் கொடுங்க’ன்னு வருமான வரித்துறையும் சொல்றது அவரை வருத்தப்பட வைத்துள்ளதாக கூறப்படுகின்றதாக அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.
பிளாக் பாண்டி வருத்தம்
இந்த நிலையில் சம்பவம் குறித்து நடிகள் பிளாக் பாண்டி கூறுகையில் ,
“‘வருமான வரித்துறையிலிருந்து உங்க ட்ரஸ்டுக்குத் தரப்பட்ட 80 ஜி வருமான வரிச்சலுகையை ஏன் ரத்து செய்யக் கூடாது’ன்னு கேட்டாங்க. இது தொடர்பா வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருமான வரித்துறைக்கு உரிய விளக்கம் தரலாம்னு இருக்கேன்.
நான் செய்யப்போனது மனிதாபிமான அடிப்படயிலான உதவி. ஆனா நாடு விட்டு நாடு உதவிகளைச் செய்யறப்ப இவ்ளோ சட்டப் பிரச்னைகள் இருக்கும்னு எனக்குத் தெரியாது” என கவலை வெளியிட்டுள்ளாராம்.