யாழ்ப்பாணம்-குருநகர் கடற்பகுதியில் 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான போதைப் பொருளை ஏற்றிச் சென்ற படகொன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இன்று புதன்கிழமை காலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த படகில் 188 கிலோ 350 கிராம் நிறையுடைய கேரள கஞ்சா கையிருப்பு 07 பயணப் பொதிகளில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.