டிசம்பர் மாத விலை திருத்தம் நாளை: லிட்ரோ நிறுவனம்

மாதாந்த எரிவாயு விலை திருத்தத்தின் பிரகாரம், டிசம்பர் மாத விலை திருத்தம் இன்று (04) அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் தற்போது நிலவும் எரிவாயு விலையுடன் ஒப்பிட்டு இம்முறை எரிவாயுவின் விலை திருத்தம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதாகவும், அதற்கேற்ப இந்த நாட்டில் எரிவாயு விலையில் அதிகரிப்பு ஏற்பட வேண்டும் எனினும், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் எரிவாயுவின் விலையை ஸ்திரமான நிலையில் பேணுவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக அதன் பேச்சாளர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றிடம் கருத்து தெரிவித்துள்ளார்..

அதற்கான முன்மொழிவுகள் நிதியமைச்சிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் எரிவாயு விலை திருத்தம் செய்யப்படாத நிலையில் இறுதியாக கடந்த ஒக்ரோபர் மாதமே எரிவாயு விலை திருத்தம் செய்யப்பட்டது.

Recommended For You

About the Author: admin