அல் நசர் கழகத்திற்கு எதிராக நேற்று (3) அல் அவ்வல் பார்க்க மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்ற அல் சாத் கழகம் புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்திற்கு முன்னேற்றம் கண்டது.
மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெறும் கழக மட்ட கால்பந்தாட்ட தொடர்களின் முதன்மைத் தொடரான சவூதி அரேபியாவின் ஏ.எப்.சி சம்பியன் லீக் கால்பந்து தொடரின் ஆறாவது வாரத்துக்கான ஆட்டத்தில் நேற்றைய தினம் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நசர் கழகமும், அக்ரம் ஆபிப் தலைமையிலான அல் காத் கழகமும் மோதின.
இரு கழகங்களும் சம பலமிக்கது என்பதனால் போட்டி ஆரம்பம் முதல் விறுவிறுப்பை ஏற்படுத்தியது. இதனால் பந்து இரு கழகங்களினதும் கோல் கம்பங்களை சென்று வந்த போதிலும் இரு கழக வீரர்களாலும் முதல் பாதியில் கோல் கணக்கை ஆரம்பிக்க முடியாமல் போனமையால் முதல் பாதி கோல்கள் இன்றி சமநிலை பெற்றது.
தொடர்ந்த தீர்க்கமான இரண்டாம் பாதி ஆட்டத்தில் அல் சாத் வீரர்களின் ஆதிக்கம் மேலோங்கியது. இதனால் போட்டியின் 53ஆவது நிமிடத்தில் வைத்து கோன்சாலெஸ் கொடுத்த பந்துக் கடத்துதலை பெற்றுக் கொண்ட அக்ரம் ஆபிப் பந்தை கோள் கம்பத்தினுள் செலுத்த 1-0 என முன்னேறியது அல் சாத்.
போட்டியின் 80வது நிமிடத்தில் வைத்து அல் சாதின் தடுப்பு வீரரான கனம் சைஸ் ஓன்கோலினை உட்செலுத்த போட்டி 1:1 என மீண்டும் சமநிலை பெற்றது.
மேலும் தொடர்ந்த தீர்மானமிக்க இறுதி நிமிடங்களில் மேலதீகமாக வழங்கப்பட்ட நிமிடங்களின் 99ஆவது நிமிடத்தில் வைத்து அல் நசர் தடுப்பு வீரரான முஹம்மது அல் பாட்டிலின் விதி மீறிய பந்துப் பறிப்பினால் அல் சாத் கழகத்திற்கு பெனால்ட்டி வாய்ப்பு கிடைக்க அதனை அடம் ஓவுனஸ் கோலாக மாற்றி போட்டி முடிவில் 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் அல் நசல் கழகத்தினை வெற்றி கொண்டு புள்ளிப்பட்டியிலில் நான்காம் நிலைக்கு முன்னேற்றம் கண்டது அல் சாத் கழகம்.