பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், ஜானி கேல் பகுதியில் பீரங்கி குண்டு வெடித்ததில் மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களுள் இரண்டு சகோதரர்களும் உள்ளடங்குவர்.
குறித்த சிறுவர்கள் பாடசாலை முடிந்து வீடு திரும்பும் வழியில் கைவிடப்பட்ட நிலயைில் பீரங்கி குண்டு ஒன்று கிடந்துள்ளது.
அதனை பொம்மை என நினைத்த சிறுவர்கள் அதை வைத்து விளையாடியபோது எதிர்பாராதவிதமாக அது வெடித்ததில் சிறுவர்கள் மூவரும் உயிரிழந்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, விரைந்து வந்த பொலிஸார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.