15 வயது பாடசாலை மாணவி துஸ்பிரயோகம் ; 52 வயது நபர் கைது !

15 வயது பாடசாலை மாணவி துஸ்பிரயோகம் ; 52 வயது நபர் கைது !

15 வயது உடைய பாடசாலை மாணவி துஸ்பிரயோகம் 52 வயது உடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் இடம் பெற்று உள்ளது.

இது குறித்து நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஜ.வீரசேகர கூறுகையில் நேற்று முன்தினம் அந்த மாணவியின் புகாரைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் ஹட்டன் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் படுத்த பட்ட போது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு இட்டு உள்ளார் ஹட்டன் நீதிமன்ற நீதிபதி.

இது குறித்து நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் கூறுகையில் சந்தேக நபர் நல்லதண்ணி தோட்டத்தில் உள்ளவர் எனவும் அவருக்கு மேலும் ஒரு வீடு லக்சபான தோட்ட முள்ளு காமம் கீழ் பிரிவில் உள்ளது எனவும் அங்கு சென்று வருகையில் பாதிக்கப்பட்ட மாணவியின் தாயாருடன் ஏற்பட்டு உள்ள தொடர்பினால் இந்த நிகழ்வு ஏற்பட்டது என்றும்.

தாயார் நல்ல தண்ணி நகரில் உள்ள விருந்தினர் விடுதியில் சமையல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் இரண்டு பெண் குழந்தைகள் பாடசாலை செல்பவர்கள் என தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவி டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொறுப்பதிகாரி சி.ஜ.வீரசேகர தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin