தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவி தொடர்பில் எவ்வித நெருக்கடியும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இன்று சனிக்கிழமை இதனைத் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச,
பட்டியலில் உள்ள அனைவரும் மிகவும் பொருத்தமானவர்கள். நாட்டை கட்டியெழுப்புவதில் இவர்கள் அனைவருக்கும் பொறுப்பு இருக்க வேண்டும்.
இந்த பட்டியலில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள் உள்ளனர். வீழ்ச்சி கண்டுள்ள நாட்டையும் 220 இலட்சம் மக்களையும் மீட்டெடுப்பதே எனது எண்ணப்பாடு.
நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை குறித்து நாட்டு மக்களாலே ஒரு முடிவுக்கு வரலாம்.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளைக்கு அமையவே அனைவரும் செயற்பட வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தி பின்பற்றும் கொள்கைகள் காணப்படுகின்றன. இந்த கொள்கைகள் மற்றும் திட்டங்களை நம்பும் மற்றும் ஏற்றுக்கொள்ளும் நேர்மறையான கருத்துக்கள் உள்ள அனைவரும் எம்மோடு இணைந்துக்கொள்ள முடியும்” என அவர் மேலும் தெரிவித்தார்.