IMF பிரதிநிதிகள் – மத்திய வங்கி அதிகாரிகள் இடையே விசேட கலந்துரையாடல்!

IMF பிரதிநிதிகள் – மத்திய வங்கி அதிகாரிகள் இடையே விசேட கலந்துரையாடல்!

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு முதலாவதாக மத்திய வங்கி அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய,குறித்த பிரதிநிதிகள் இன்று (18) மத்திய வங்கி பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஜனாதிபதி மற்றும் புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களை சந்திப்பதற்கும் குறித்த குழு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடலின் நிறைவில், குறித்த பிரதிநிதிகள் குழு ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மேற்கொண்டு, விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது மதிப்பாய்வு தொடர்பான முன்னேற்றம் குறித்து தெரிவிக்கவுள்ளனர்.

விரிவாக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான மூன்றாவது மீளாய்வுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு நேற்று (17) நாட்டை வந்தடைந்தது.

இந்த விஜயத்தின் பின்னர்,சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் 4 ஆவது தவணை இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் நான்கு வருட கால நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin