நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் மகாராணிக்கு அஞ்சலி

யாழ். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணியாக முடிசூட்டு விழாவின் போது பாராட்டுப் பத்திரமும் வெள்ளிப்பதக்கமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து எலிசபெத் மகாராணிக்கு பாடசாலையில் நினைவேந்தல் நிகழ்வு ஒன்று இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் பீட சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி மலர்மாலை அணிவித்ததுடன் எலிசபெத் மகாராணியின் நினைவஞ்சலி உரையினை ஆற்றினார்

யாழ். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் ஸ்தாபகர் முதலியார் அத்தியார் அருணாசலம் அவர்களது சேவைகளைப் பாராட்டி 1953 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் 2 ஆம் எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாவின் போது பாராட்டுப் பத்திரமும் வெள்ளிப்பதக்கமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து இந்த நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் யாழ். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் அதிபர் எஸ்.விஷ்ணு வரதன் உள்ளிட்ட கல்லூரி சமூகத்தினர், ஆசிரியர்கள்,மாணவர்கள் மறைந்த மகாராணிக்கு அஞ்சலி செலுத்தினர்.

Recommended For You

About the Author: webeditor