உலகின் சிறந்த கால்பந்து வீரர்களுக்கான பாலன் டி’ஓர் (Ballon d’Or) விருது வழங்கும் நிகழ்வானது திங்கட்கிழமை (28) நடைபெறவுள்ளது.
68 ஆவது முறையாக நடத்தப்படும் மதிப்பு மிக்க இந்த விருது வழங்கும் நிகழ்வானது பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் திங்கட்கிழமை மாலை நடைபெறும்.
பிரமாண்டமான இந்த நிகழ்வினை காண்பதற்கு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
பல வருடங்களில் முதல் முறையாக பாலன் டி’ஓர் பரிந்துரைப் பட்டியலில் லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாமல் இருப்பது கால்பந்து வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் ஆகும்.
மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ இணைந்து கடந்த 16 ஆண்டுகளில் 13 முறை மதிப்பு மிக்க இந்த விருதை வென்றுள்ளனர்.
மெஸ்ஸி, 2023 இல் அர்ஜென்டினாவை உலகக் கிண்ண வெற்றிக்கு அழைத்துச் சென்றதன் மூலம் தனது எட்டாவது மற்றும் இறுதி பலோன் டி’ஓரைப் பெற்றார்.
இப்போது, இவ்கள் இல்லாத நிலையில், ரியல் மாட்ரிட் நட்சத்திரமான வினீசியஸ் ஜூனியர் போன்ற புதிய போட்டியாளர்களுக்கான அதிக கவனத்தை இவ் விருது விழா ஈர்க்கிறது.
பாலன் டி’ஓர் விருதானது ஃபிரான்ஸ் கால்பந்து சஞ்சிகையால் உருவாக்கப்பட்டதுடன், 1956 முதல் விருதுகளை வழங்குகிறது