ஈரானின் அணு உலைகள் மற்றும் எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய கிழக்காசிய பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படும் தாக்குதலை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் அமெரிக்காவின் ஒத்துழைப்போ, ஆலோசனையோ இல்லையென பென்டகன் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலையடுத்து தெஹ்ரானில் வான் பாதுகாப்பு அமைப்புகள் சைரனை ஒலிக்க தொடங்கி உள்ளன. மேலும் ஈரான் நாட்டின் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.