மூன்று நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

அண்மையில் பெய்த மழையினால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை இலக்காகக் கொண்டு எதிர்வரும் 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனால், வெள்ளம் காரணமாக அதிக ஆபத்தில் உள்ள கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள 22 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை மையப்படுத்தி இந்த டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 41,212 ஆகும்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரங்கள்

Recommended For You

About the Author: admin