இலங்கை தமிழரசுக்கட்சியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிடும் எஸ்.சிறீதரன் வெற்றி பெற்றால் அவரது பதவி பறிக்கப்படலாம் என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்பாளர் ப.கஜதீபன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்த அவர், தமிழரசுக் கட்சியில் சிறீதரன், மாவை சேனாதிராஜா, ஸ்ரீநேசன் உள்ளிட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளுக்காகக் கட்சியால் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழரசுக் கட்சியின் கொள்கை முடிவுகளை மீறி இருக்கின்றமை தொடர்பாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் கட்சியின் பொதுச் செயலாளர் சத்தியலிங்கம் விளக்கம் கோரியிருக்கிறார்.
தொடர்ச்சியாக வழக்குகள் போடப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
இதனால் தேர்தலுக்குப் பின்னர் நடக்கக்கூடிய சம்பவங்கள் மிக வேடிக்கையாக இருக்கும் என்று நாங்கள் கருதுகின்றோம்.
இந்த ஒழுக்காற்று விசாரணையினூடாக பலர் ஓரங்கட்டப் பட்டிருக்கின்ற நிலையில் சிறீதரன் மாத்திரம் உள்வாங்கப்பட்டிருக்கிறார்.
சில வேளைகளில் சிறீதரன் தங்களுடைய வேட்பாளர்கள் அத்தனை பேரையும் விட வாக்குகளைக் கவரக் கூடியவராக இருப்பார் என அவர்கள் நினைத்திருக்கக்கூடும்
அதன் அடிப்படையில் அவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கின்றார் என நாங்கள் நம்புகின்றோம்.
எனவே சிறீதரன் வெற்றிபெற்றாலும் தேர்தலுக்குப் பிறகு ஒழுக்காற்று விசாரணை மூலம் அந்த பதவி பறிபோகும் என நம்புவதாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்பாளர் ப.கஜதீபன் தெரிவித்தார்.
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரங்கள்