சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட போர்க்காலத்தின் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் அவர்களதுது 24ம் ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் முன்னெடுக்கப்பட்டது.
2000ஆம் ஆண்டு இதே நாளில் வீட்டில் வைத்து ஆயுத்தாரிகளின்னால் சுற்றிவளைப்பப்பட்டு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
போர்காலத்தின் போது இராணுவக்கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணத்தில் இருந்து சர்வதேச ஊடகங்களின் ஊடகவியலாளராக செயற்பட்டு வந்திருந்த நிலையில் ஆயுதம் தாங்கிய இராணுவம் மற்றும் துணை இராணுவக் குழுவொன்றினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
படுகொலை செய்யப்பட்ட மயில்வாகனம் நிமலராஜனின் நினைவேந்தல் யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் மூத்த ஊடகவியலாளர் எஸ்.தில்லைநாதன் தலைமையில் நினைவுகூறப்பட்டது.
ம.நிமலராஜனின் திருவுருவப்படத்திற்கு சுடரேற்றி மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.






