யாழில் அரச காணிகளை அபிவிருத்திச் செயற்திட்டங்களுக்கு வழங்கத் தீர்மானம்

யாழ்.மாவட்டக் காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் இன்று யாழ்.மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் அரச காணிகளை அபிவிருத்திச் செயற்திட்டங்களை மேற்கொள்வதற்கு வழங்குதல் தொடர்பாக ஆராயப்பட்டது.

அத்துடன் காணிகளைக் கையளித்தல், காணிகளைப் பாரதீனப்படுத்தல், நீண்டகாலக் குத்தகைக்கு வழங்குதல், காணிக் கச்சேரி மூலம் காணி வழங்குதல் மற்றும் வலி.வடக்குப் பகுதியில் விடுவிக்கப்படாத  இடங்களை  அடையாளப்படுத்தல் தொடர்பான  விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.முரளிதரன், காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் அலுவலக உதவிப் பணிப்பாளர், மாவட்டச் செயலகத் திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மற்றும் திணைக்களங்களின் துறைசார் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: webeditor