முல்லைத்தீவு இளம் சட்டத்தரணி தமிழரசுக் கட்சி வேண்டாம் என ஓடிகிறார்!

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா அச்சுறுத்தல் என நாட்டை விட்டு ஓடிவிட்டார்!

தமிழரசு கட்சியில் தமிழ் தேசியம் அற்றுப் போய்விட்டது தமிழரசு கட்சியில் போட்டியிட்டால் மக்கள் நலன் சார்ந்து பயணிக்க முடியாது என முல்லத்தீவு இளம் சட்டத்தரணி தனஞ்சியன் பகிரங்கமாக கூறிய கருத்து இம்முறை தேர்தலில் தமிழரசு கட்சிக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

முன்னைய காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து கேட்டாலும் தமிழரசு கட்சியில் ஆசனம் பெற்று தேர்தலில் வேட்பாளராக நிற்க வேண்டும் என்பது பலருடைய கனவு.

அந்தக் கனவு தற்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற தமிழரசு சிவஞானம் சிறிதரனுக்கு கூட எட்டாக் கனிமாகவே இருந்தது.

தமிழரசு கட்சியில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட முயற்சி மேற்கொண்ட நிலையில் ஆசனம் கிடைக்காததால் ஈபிஆர் எல் எவ் ஊடாக ஆசனம் பெற்று பாராளுமன்றம் சென்று பின்னர் தமிழரசு கட்சிக்குள் நுழைந்தவர் .

இது ஒரு உதாரணம் மட்டும் இது போன்ற பல சம்பவங்கள் இடம்பெற்றது.

இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால் முல்லத்தீவு இளம் சட்டத்தரணி தனஞ்சியன் தமிழரசு கட்சியில் போட்டியிட்டால் மக்கள் நலன் சார்ந்து பயணிக்க முடியாது தமிழ் தேசியம் அற்று விட்டது என கூறுகிறார்.

தந்தை செல்வாவினால் தமிழ் தேசிய உணர்வு ஊட்டப்பட்டு வளர்க்கப்பட்ட தமிழரசு கட்சி இன்று இந்நிலைக்கு வந்து விட்டது இதற்கு யார் காரணம் என்பதும் பலருக்கு தெரியும்.

ஒரு சாதாரண குடிமகன் தமிழரசு கட்சியை ஆதரிக்க வேண்டாம் எனக் கூறுவதும் .

தமிழ் தேசியத்தின்பால் பயணிக்கின்ற இளம் சட்டத்தரணி ஒருவர் தமிழரசு கட்சியில் ஜனநாயகம் இல்லை அதனால் அந்தக் கட்சியில் போட்டியிடுவதற்கு எனக்கு விருப்பமில்லை என கூறுவது எந்தளவு தூரம் தமிழரசு கட்சியின் பிடி யாருடைய கையில் உள்ளது என்பது தெளிவாகிறது.

தற்போது இடம்பெறவுள்ள தேர்தலில் தமிழரசு கட்சியில் பல சுவாரசிய சம்பவங்கள் இடம்பெறலாம் என எதிர்வு கூறப்படுகிறது.
தேர்தலில் போட்டியிடும் அறிந்த வேட்பாளர் ஒருவர் தோற்கடிக்கப்பட்டு போனஸ் ஆசனம் மூலம் ஒருவர் பாராளுமன்றம் செல்லப் போகிறாராம்.

அரசியலில் எதுவும் நடக்கலாம் பொறுத்திருந்து பார்ப்போம் தமிழரசு கட்சியின் உள்வீட்டுப் பிரச்சனை

 

Recommended For You

About the Author: admin