யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் புதிதாக மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளமை குறித்து ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் மத்தியகுழு உறுப்பினர் கீதநாத் காசிலிங்கம், சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இது குறித்து சுட்டிக்காட்டியுள்ள அவர், பரந்தன் சந்தி முதல் இரணைமடு சந்திவரை மதுபான நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் வாழும் இப்பகுதிகளில் இவ்வாறு மதுபானசாலைகள் திறக்கப்படுவதால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அக்கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த பகுதியின் சில அரசியல்வாதிகளின் ஆதரவை பெறுவதற்காக, முன்னைய அரசாங்கம் மதுபான நிலையங்களுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளது என தெரிவித்துள்ள அவர், ஜனாதிபதி இதில் தலையிட்டு தேவையற்ற மதுபான நிலையங்களை மூடவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.