நிர்மலா சீதாராமன் மீது வழக்கு தாக்கல்

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல் விடுத்து பணம் பெற்ற குற்றச்சாட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பெங்களூரு திலக் நகர் பொலிஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜனாதிகாரா சங்கர்ஷ பரிஷத் அமைப்பின் துணைத்தலைவர் ஆதர்ஷ் ஐயர் மனுதாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், “நிர்மலா சீதாராமன், ஜெ.பி.நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிமன்றம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா, கர்நாடக முன்னாள் பாஜக தலைவர் நளின் குமார், கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது பெங்களூரு திலக் நகர் பொலிஸ் நிலையத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதற்காக மத்திய பா.ஜ.க. அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தைக் கொண்டு வந்தது.

கடந்த பெப்ரவரி மாதம் தேர்தல் பத்திரம் திட்டத்தை அந்நாட்டு உச்சநீதிமன்றம் இரத்து செய்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin