யாழில் பிரபல உணவகத்துக்கு சீல்!

யாழ்ப்பாண பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த பிரபல உணவு கையாளும் நிலையம் ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், 15 உணவு கையாளும் நிலைய உரிமையாளர்களுக்கு 1 இலட்சத்து 40,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் உணவு கையாளும் நிலையங்களில் சுகாதார பரிசோதகர்களால் திடீர் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனையின் போது, உரிய முறையில் குளிர்சான பெட்டியை பேணத் தவறியமை, தனிநபர் சுகாதாரம் பேணாமை, சரியான மருத்துவ சான்றிதழ் இல்லாமை, சுகாதார முறைப்படி உணவு கையாளும் இடப்பரப்பினை பேண தவறியமை, உபகரணங்களை உரிய முறையில் பேண தவறியமை போன்ற செயற்பாடுகளுக்கு எதிராக உரிமையாளர்களுக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

குறித்த வழக்கு கடந்த 19-09-2024 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது 15 உரிமையாளர்கள் தம் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவர்களை கடுமையாக எச்சரித்த மன்று, உரிமையாளர்களுக்கு ஒரு இலட்சத்து 40,000 ரூபா அபராதம் விதித்தது.

இதேவேளை, ஒரு உரிமையாளரின் உணவகத்தில் உள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யும் வரையில் உணவகத்திற்கு சீல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Recommended For You

About the Author: admin