நிராகரிக்கப்பட்ட வாக்குகளை பதிவுசெய்த அரச ஊழியர்கள்

நிராகரிக்கப்பட்ட வாக்குகளை பதிவுசெய்த அரச ஊழியர்கள்

2024 ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்குகளை பதிவுசெய்த அரச ஊழியர்களின் 16,508 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், மூன்று இலட்சத்து 300 வாக்குகள் நாடளாவிய ரீதியில் நிராகரிக்கப்பட்டுள்ளன (2.2 சதவீதம்).

கடந்த ஜனாதிபதி தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை நிராகரிக்கப்பட்ட வாக்கு வீதம் அதிகரித்துள்ளது. அத்துடன் தபால் மூல வாக்குகளை பதிவுசெய்த அரச அலுவலர்கள் அதிக எண்ணிக்கையிலான நிராகரிக்கப்பட்ட வாக்குகளை வழங்கியுள்ளமை கவலைக்குரியதும் சிந்திக்கக்கூடியதுமாகும்.

ஒரு கோடியே 71 லட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தாலும் ஒரு கோடியே 36 லட்சத்து 19 ஆயிரத்து 916 பேரே வாக்களித்திருந்தனர். வாக்கு பதிவு (79.46 சதவீதம்)

தபால் மூல வாக்குகளின் அடிப்படையில் மாத்தளை மாவட்டத்தில் 21,667 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 21,412 பேர் வாக்களித்திருந்தனர். அதில் 484 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன (2.26 வீதம்). மாத்தறை மாவட்டத்தில் 30, 882 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 30, 497 பேர் வாக்களித்திருந்தனர். அதில் 593 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன (1.94 வீதம்).

நுவரெலியா மாவட்டத்தில் 19, 717 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 19, 511 பேர் வாக்களித்திருந்தனர். அதில் 536 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன (2.75வீதம்). மட்டக்களப்பு மாவட்டத்தில் 13, 116 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 12, 939 பேர் வாக்களித்திருந்தனர். அதில் 235 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன (1.82 வீதம்).

அநுராதபுரம் மாவட்டத்தில் 55, 191 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 54, 484 பேர் வாக்களித்திருந்தனர். அதில் 1000 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன (1.84 வீதம்). குருணாகல் மாவட்டத்தில் 76, 977பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 76, 360 பேர் வாக்களித்திருந்தனர். அதில் 1777 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன (2.33 வீதம்).

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 25, 429 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 25, 150 பேர் வாக்களித்திருந்தனர். அதில் 1089 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன (4.33 வீதம்). கம்பஹா மாவட்டத்தில் 52,486 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 52, 005 பேர் வாக்களித்திருந்தனர். அதில் 1416 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன (2.72 வீதம்).

புத்தளம் மாவட்டத்தில் 14,967 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 14, 713 பேர் வாக்களித்திருந்தனர். அதில் 290 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன (1.97 வீதம்). பதுளை மாவட்டத்தில் 42,061 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 41, 271 பேர் வாக்களித்திருந்தனர். அதில் 783 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன (1.9 வீதம்).

கண்டி மாவட்டத்தில் 55,797 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 55, 194 பேர் வாக்களித்திருந்தனர். அதில் 1494 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன (2.71 வீதம்). களுத்துறை மாவட்டத்தில் 37,348 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 36, 722 பேர் வாக்களித்திருந்தனர். அதில் 763 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன (2.08 வீதம்).

கொழும்பு மாவட்டத்தில் 35,636 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 35, 249 பேர் வாக்களித்திருந்தனர். அதில் 1059 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன (3 வீதம்). திகாமடுல்ல மாவட்டத்தில் 28,778 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 28, 557 பேர் வாக்களித்திருந்தனர். அதில் 491 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன (1.85 வீதம்).

காலி மாவட்டத்தில் 41,437 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 41, 067 பேர் வாக்களித்திருந்தனர். அதில் 927 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன (2.26 வீதம்). ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 22,167 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 21, 998 பேர் வாக்களித்திருந்தனர். அதில் 449 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன (2.04 வீதம்).

கோகாலை மாவட்டத்தில் 35,103 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 34, 798 பேர் வாக்களித்திருந்தனர். அதில் 894 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன (2.57 வீதம்). மொனராகலை மாவட்டத்தில் 24, 797 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 24, 644 பேர் வாக்களித்திருந்தனர். அதில் 555 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன (2.26 வீதம்).

பொலன்னறுவை மாவட்டத்தில் 19,858 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 19, 583 பேர் வாக்களித்திருந்தனர். அதில் 372 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன (1.9 வீதம்). இரத்தினபுரி மாவட்டத்தில் 32, 530 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 32,179 பேர் வாக்களித்திருந்தனர். அதில் 640 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன (1.99 வீதம்).

வன்னி மாவட்டத்தில் 13,389 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 13,108 பேர் வாக்களித்திருந்தனர். அதில் 344 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன (2.62 வீதம்). திருகோணமலை மாவட்டத்தில் 14, 984 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 14,780 பேர் வாக்களித்திருந்தனர். அதில் 317 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன (2.14 வீதம்).

Recommended For You

About the Author: admin