பரபரப்பான வாழ்க்கையில் பல சமயங்களில் ஜிம், உடற்பயிற்சி நம்மால் நேரத்தை ஒதுக்க முடியவதில்லை. ஆனால் இப்போது அதற்குகாக கவலை அடைய தேவையில்லை.
உடல் எடையையும் தொப்பையையும் வேகமாகக் கரைக்கும் சில அற்புதமான பானங்கள் உள்ளன. இவற்றை வீட்டில் தயார் செய்வதும் மிகவும் எளிதானது.
மசாலா மோர் : உங்கள் தினசரி உணவில் மோர் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும், ஏனெனில் இது உடல் எடையை குறைக்கும் அருமருந்தாகும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் கலோரிகள் மிகவும் குறைவு, வயிற்றை குளிர்வித்து, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
இதனை தினமும் குடிப்பதால் உடலில் உள்ள கொழுப்பு கரைய ஆரம்பிக்கும். மோரில் சர்க்கரை முற்றிலும் இல்லை, சர்க்கரை உடல் பருமனை அதிகரிக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
அதிலும் அதில் வறுத்து பொடித்த ஜீரகத்தூள், கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்தால் அதை போல் எடையை குறைக்கும் மேஜிக் பானம் வேறு இல்லை எனலாம்.
துளசி விதைகள் கலந்த தண்ணீர் : தொப்பை கொழுப்பை வேகமாக கரைக்க விரும்பினால், துளசி விதைகளை உட்கொள்வது உங்களுக்கு விரும்பிய பலனைத் தரும். இது பொதுவாக சப்ஜா விதைகள் என்றும் அழைக்கப்படுகிறது.
இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த விதையை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், நீண்ட நேரம் பசி எடுப்பதில்லை, எடையும் குறைய ஆரம்பிக்கும்.
எலுமிச்சை கலந்த சூடான நீர் : காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால், தொப்பையை வேகமாக குறைக்கலாம்.
இதனால் உடலில் நீர்ச்சத்து குறைவில்லாமல் இருப்பதோடு மட்டுமின்றி, உடலில் உள்ள நச்சுக்கள் விரைவில் வெளியேறும். இந்த பானம் மூலம் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது.
இது உடல் எடையை குறைய ஒரு முக்கிய காரணம். எலுமிச்சையில் ஃபிளாவனாய்டுகள், வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய கூறுகள் உள்ளன, அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்